சீன பணியாளர்களைப் பாதுகாக்க பாக். இராணுவப் படை அனுப்ப முடிவு

சீன பணியாளர்களைப் பாதுகாக்க பாக். இராணுவப் படை அனுப்ப முடிவு-Pakistan Will Send Troop to Protect Chinese Personnel

சீன நிறுவன ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக தாசு அணை இருக்கும் இடத்தில் ராணுவப் படையை நிலைநிறுத்துவதாக பாகிஸ்தான் நீர்வள அமைச்சின் செயலாளர் பொது கணக்குக் குழுவுக்கு அறிவித்தார்.

சீன நிறுவனத்தின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட தாசு அணையின் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து செனட்டர் முஷைத் ஹுசைன் சையத் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். இந்த குண்டுவெடிப்பில் ஒன்பது சீன பிரஜைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்த சில நாட்களுக்குள் தாசு அணை அமைந்துள்ள இடத்தில் ராணுவப் படை மாற்றப்படும் என்று செயலாளர் கூறினார். இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இந்த மாதத்திற்குள் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

"எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று சீனர்களுக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார். 

Wed, 08/11/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை