தேசிய ரூபவாஹினியில் "குருதலாவ" கல்வி சேவை

இவ்வாண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக ` குருதலாவ `என்னும் பெயரில் புதிய கல்வி நிகழ்ச்சியொன்று தேசிய ரூபவாஹினி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சையில் அநேகமான மாணவ-,மாணவிகள் தோற்றும் 10 பாடங்களுக்கான இந்த மீட்டல் பாடத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இரசாயனவியல், பௌதீகவியல், கணக்கியல், சிங்களம், உயிரியல், தகவல் தொழில்நுட்பம், பொருளியல், வர்த்தகவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான பாடங்களுக்காக இந்த பாடத் தொடர் ஒளிபரப்பாகும். செப்டம்பர் 23 தொடக்கம் வார நாட்களில் மாலை 2 மணி முதல் 4 மணி வரை` குருதலாவ` நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதோடு அதற்காக இலங்கையின் பிரபலமான மேலதிக வகுப்பு ஆசிரியர்களான கலாநிதி குணபால ரத்னசேக்கர,பண்டார திசாநாயக்க, கலாநிதி மஞ்சுல ரணசிங்க, நயனஜித் ரத்நாயக்க, சமல் இந்தகொட, தரிந்து விதானகே,ஹசித்த க,துஷ்யந்த் மகபதுகே, தேவேந்திரசில்வா, மஹிந்த ரத்னாயக்க, பிரபுத்த சிறிமால், ரணில் பிரபாத், மற்றும் சஜித் கெலும் போன்ற ஆசிரியர்கள் ரூபவாஹினி நிகழ்ச்சியில் முதன்முறையாக இணைந்து கொள்கின்றார்கள்.

குருதலாவ`` ரூபவாஹினியின் முதலாவது அரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும். புதிய ஊடக அமைச்சராக டளஸ் அழகப்பெரும பதவியேற்ற பின்னர் நாட்டின் மாணவ மணிகளின் கல்வித் தேவைகளுக்காக தேசிய ஊடகங்களில் முன்னுரிமை வழங்க கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரேயின் வழிகாட்டலின் கீழ் இவ்வாறான பல நிகழ்ச்சிகள் அதிக பலனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குருதலாவ நிகழ்ச்சிக்கு மேலதிகமாக `தேசிய பாடசாலை` கிழமை நாட்களில் காலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை ஒளிபரப்படுவதோடு அந்நிகழ்ச்சி முக்கியமாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கானது. திங்கட்கிழமைகளில் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை `நெனமிஹிர` நேரடி ஒளிபரப்பும் நடைபெறுகின்றது, அதைத் தவிர `ஐ` மற்றும் நேத்ரா அலைவரிசைகளில் மாலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை `குருகெதர` கல்வி நிகழ்ச்சி ஏழு நாட்களும் 16 மணித்தியாலம் வீதம் ஒளிபரப்பப்படுகிறது. சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியதாக இந் நிகழ்ச்சி நடைபெறுவது விஷேட அம்சமாகும்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 1982-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு தேசிய தொலைக்காட்சியில்அதன் முக்கிய பொறுப்பாக கல்வி சேவை நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக ஒளிபரப்பப்பபடுகின்றன.

 

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை