தினகரன் ஆசிரியபீட முன்னாள் ஊழியர் முனவ்வர் காலமானார்

தினகரன் ஆசிரியபீட முன்னாள் ஊழியர் முனவ்வர் காலமானார்-Thinakaran Staff-MA Munawwar Passed Away

தினகரன் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேருவளை இந்திலியகொட, மக்கொனையைச் சேர்ந்த எம்.ஏ. முனவ்வர் (62) காலமானார்.

நோய்வாய்ப்பட்டு நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (13) உயிரிழந்துள்ளார்.

தினகரன் ஆசிரிய பீடத்தில் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய பின்னர் இவர் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் செயற்பாட்டு அங்கத்தவராக அதன் பணிகளில் அதிகம் பங்களித்த அவர் சக ஊழியர்களுக்கு உதவி செய்வதில் முன்னின்று செயற்பட்டவர்.

அவரின் ஜனாஸா நல்லடக்கம் ஓட்டமாவடியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அவரின் மறைவிற்கு அவரின் மனைவி பாத்திமா சபீக்காவுக்கும் உறவினர்களுக்கும் தினகரன் ஆசிரிய பீடம் மற்றும் லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் சார்பில் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Fri, 08/13/2021 - 21:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை