கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த வருட வாக்காளர் பதிவிற்கமைய இந்த வருடத்திலும் வாக்காளர் பதிவு

வீடுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது

தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலை காரணமாக இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவு வீடுகளுக்கு சென்று மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் கடந்த வருடத்தின் வாக்காளர் இடாப்புக்கிணங்க இந்த வருடத்திற்கான வாக்காளர்களை பதிவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் எந்த விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, கடந்த வருடத்தில் வாக்காளர் பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதே முகவரியில் இந்த வருடத்தின் வாக்காளர் பதிவும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் தேர்தல் வாக்காளர் இடாப்பு இக்காலங்களில் அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களிலும்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திப் போடப்பட்டுள்ளன என்றும் மேற்படி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் வாக்காளர்கள் 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும். அதற்கிணங்க தேர்தல் இடாப்பில் தமது பெயர்கள் காணப்படாவிட்டால் உடனடியாக தமது பகுதி கிராம சேவை அதிகாரிக்கு அது தொடர்பில் அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 08/27/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை