ஆப்கான் அகதிகளுக்கு உகண்டா அடைக்கலம்

ஆப்கானிஸ்தானில் வசிக்க விரும்பாத மக்களை அழைத்துக் கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

2 ஆயிரம் ஆப்கன் அகதிகளை ஏற்றுக் கொள்வதாக ஆபிரிக்க நாடான உகாண்டா அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 500 பேர் உகாண்டாவின் என்டபே விமானநிலையத்தில் தரையிறங்கினர்.

அமெரிக்காவின் கோரிக்கைக்கு அமையவே இந்த அகதிகளுக்கு தற்காலிக அடைக்கலம் வழங்குவதாக உகண்டா தெரிவித்துள்ளது. ஏற்கனவே உகண்டாவில் தென் சூடானில் இருந்து தப்பி வந்த 1.4 மில்லியன் மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

ஆப்கான் அகதிகளுக்கு தற்காலி அடைக்கலம் வழங்குவது குறித்து அமெரிக்கா மேலும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று 20 ஆயிரம் ஆப்கானிய அகதிகளை ஏற்றுக்கொள்வதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. நடப்பாண்டில் 5 ஆயிரம் பேருக்கு இங்கிலாந்தில் வீடு கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் படி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.

Thu, 08/19/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை