வீடு திரும்பினார் அஜித் ரோஹன

கொரோனா தொற்றுக்குள்ளாகி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விடயங்களுக்கான பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன வீடு திரும்பியுள்ளார். நேற்று முற்பகல், அவர் கொவிட் 19 சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து பூரண சுகம் பெற்று வீடு திரும்பினாலும், அடுத்த இரு வாரங்களுக்கு தான் சுய தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கவுள்ளதாகவும் அதன் பின்னரேயே கடமைகளுக்கு திரும்பவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

அத்துடன் தான் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை