விதி முறைகளை மீறி திருமண நிகழ்வு

விருந்தினர்கள் வெளியேற்றம்

பொகவந்தலாவ ஆரியபுர பகுதியிலுள்ள மண்டபத்தில் சுகாதார விதி முறைகளை மீறி நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா மற்றும் டெல்டா தொற்று காரணமாக திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.இந்நிலையில் சுகாதார விதி முறைகளை மீறி இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்விற்கு 25ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த திருமண மண்டபத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் திருமண மண்டபத்தில் இருந்த அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கினர். திருமண நிகழ்வில் கலந்து கொண்டோரை அங்கிருந்து வெளியேற்றிய பொது சுகாதார வைத்தியஅதிகாரிகள் திருமண நிகழ்விற்கு மணமகள் ,மணமகன் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் மாத்திரம் கலந்து கொள்ள முடியுமென அனுமதி வழங்கியிருந்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 
Sat, 08/21/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை