சூரியவெவ பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வினால் உயிரினங்கள் பாதிப்பு

எம்பிலிப்பிட்டிய சூரியவெவ பெலி கல்லவெவ குளத்தில் நீர் அருந்த வரும் உயிரினங்கள் அதனைச்சுற்றிய நிலப்பரப்பிலுள்ள சேற்று நிலத்தில் சிக்கி உயிரிழப்பதாக பரவலாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

மணல் அகழ்வுக்காக அரசாங்கத்தின் அனுமதி பெற்று வியாபாரிகள் இவ்விடத்தில் பாரியளவில் கிடங்குகள் குழிகளை வெட்டி பெரும் சேதத்தை ஏற்படுத்துவது என பிரதேச மக்களும் சுற்றாடல் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்

பல அபிவிருத்திப் பணிகளை பொறுப்பேற்றுள்ள பாரிய கம்பனிகள் அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரத்துடன் இக்குளத்தின் கரைகளை ஆழமாக வெ ட்டி மண்ணை வாகனங்களில் அள்ளிச் செல்வதால் இந்நிலைமை ஏற்பட்டுவதாக தெரிவிக்கப்ப டுகிறது.

இயற்கையும் பசுமையும் நிறைந்த வனத்தின் மத்தியில் அமைந்துள்ள இக்குளத்தினை சூழ மண்வெட்டுவதனால் ஆழமான குழிகள் கிடங்குகள் காணப்படுகின்றது. இதனால் குளத்தைச் சுற்றி நீர் நிரம்பியுள்ளமையினாலும் இதையறியாது நீர் அருந்தவரும் மிருகங்கள் இவற்றில் விழுந்து உயிரிழப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலைமை குறித்து அதிகாரிகள் மற்றும் பொறுப்பானவர்களுக்கு அறிவித்துள்ள போதிலும் உரியவர்கள் அலட்சியத்தன்மையுடன் செயற்படுவதனால் இக்குளமும் சுற்றாடலும் உயிரினங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

 
Tue, 08/10/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை