கடும் பயணக்கட்டுப்பாட்டை மீண்டும் விதிப்பது மிக அவசியம்

PHI சங்கத் தலைவர் உபுல் அவசர கோரிக்கை

​கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ஏற்படும் மரண எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று நாட்டின் நிலைமை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகள் தற்போது அமுலில் இருந்தாலும் தொற்று பரவல் அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து இன்னும் சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tue, 08/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை