அரச, தனியார் ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தமக்கான  போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்து சபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்கள் கடமைக்கு செல்வதற்காக தேவையான பஸ் வண்டிகளை அருகிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்பவர்களிடம் வழமையான பஸ் கட்டணத்தை மட்டுமே அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஊடகவியலாளர்கள் தமது ஊடகவியலாளர் அடையாள அட்டையை காண்பித்து அத்தியாவசிய சேவை பஸ்களில் பயணிக்கலாம் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறான சேவைகள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர், சுங்கம், துறைமுகம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்காக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை