தாய்லாந்தில் நோய்த் தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை உச்சம்

தாய்லாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 20,200 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்களும் 188 உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையாக இது உள்ளது.

இதன்மூலம் அந்த நாட்டில் பதிவான மொத்த நோய்த் தொற்று சம்பவங்கள் 672,385 ஆக அதிகரித்திருப்பதோடு மொத்தம் 5,503 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமையே அதிகபட்ச நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து தலைநகர் பாங்கொக் மற்றும் அபாயகரமான பகுதிகளில் அரசு கட்டுப்பாட்டை இறுக்கியது.

தாய்லாந்தில் வேகமாக பரவக்கூடிய டெல்டா மற்றும் அல்பா வைரஸ் திரிபுகள் நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது.

தாய்லாந்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கடந்த ஜூனில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 66 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 5.8 வீதத்தினருக்கு மாத்திரமே இதுவரை முழுமையான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

 

Thu, 08/05/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை