நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் சிலவேளை மாற்றங்கள் ஏற்படலாம்

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

நாட்டை மீண்டும் திறப்பதற்கான தீர்மானத்தில் சிலவேளைகளில் மாற்றங்கள் ஏற்படலாமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோப்புள்ளே தெரிவித்துள்ளார்.

கொவிட்19 தொற்றின் மூன்றாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்  தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. என்றாலும், நாட்டில் கடந்த சில தினங்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாமென சுகாதார நிபுணர்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோப்புள்ளே, நாட்டை மீண்டும் திறப்பதற்கான முடிவில் சிலவேளை மாற்றங்கள் ஏற்படலாம்.

நாட்டை திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்த தருணத்தில் இருந்த சூழ்நிலை அல்ல தற்போது உள்ளது. கடந்த வாரம் முதல் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியுள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Mon, 08/02/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை