மெக்சிகோ சூறாவளி: எட்டுப் பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் ஏற்பட்ட கிரேஸ் சூறாவளியால் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி காரணமாக கடும் மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் வெள்ளம் ஏற்பட்டதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை இந்த சூறாவளி கரையை அடைந்தபோதும் மரங்கள் சாய்க்கப்பட்டன. மோசமாக பாதிக்கப்பட்ட வெரக்ரூஸ் மாநிலத்திலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மாநிலத் தலைநகரான சலாபா வீதிகள் சேற்று மண்ணால் புதையுண்டன. இந்த சூறாவளி வலுவிழந்து ஒரு வெப்பமண்டல புயலாக உள்நாட்டுக்குள் நகர்ந்தது. எனினும் சூறாவளியால் தொடர்ந்து மழை பெய்யும் சூழலில் வெள்ளப்பாதிப்பு அதிகரித்துள்ளது. மணிக்கு 200 மீற்றர் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளியில் கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

சூறாவளியால் பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கனமழையால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

Mon, 08/23/2021 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை