வெடி பொருட்களுடன் சனியன்று ஒருவர் கைது

மூதூரில் சம்பவம்; விசாரணை முன்னெடுப்பு

மூதூர் சந்தனவெட்டைப் பகுதியில் சனிக்கிழமை வெடிபொருட்களுடன் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.டைனமைற் குச்சிகள் -07, டெட்டனேட்டர் குச்சிகள் -03, 08 அடி நீளமுள்ள வயர் போன்றவற்றுடன் மூதூர் – சந்தனவெட்டைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரேசந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலில் குறித்த பகுதியில் உள்ள வீதியில் அவரை சோதனைக்குட்படுத்தியபோதே வெடிபொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்களை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை