புர்கினா பாசோவில் பொதுமக்கள் பலர் பலி

வடக்கு புர்கினா பாசோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு நகரான அர்பின்டாவுக்கு அருகில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் 30 பொதுமக்கள் மற்றும் 14 படையினர் உட்பட குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச துருப்புகள் 16 கிளர்ச்சியாளர்களை கொன்றதாக அரச ஊடகம் குறிப்பிட்டபோதும் அந்த எண்ணிக்கை 58 ஆக உள்ளது என்று பாதுகாப்பு தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுக் குழுவுடன் தொடர்புபட்ட போராளிகள் புர்கினா பாசோ மற்றும் அண்டை நாடுகளான மாலி மற்றும் நைகரில் அடிக்கடி நடத்தும் தாக்குதல்களில் இந்த ஆண்டில் மாத்திரம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நைகர் கிராமம் ஒன்றில் ஆயுததாரிகள் கடந்த திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 37 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அல் கொய்தாவுடன் தொடர்புடைய போராளிகள் 2012 ஆம் ஆண்டு வடக்கு மாலியை கைப்பற்றியதைத் தொடர்ந்து சஹெல் பிராந்தியத்தில் குழப்பம் நிலவுகிறது.

Fri, 08/20/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை