இறப்போரில் அதிகமானோர் தடுப்பூசியை பெறாதவர்களே!

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்

இலங்கையில் தொடர்ந்தும் பதிவாகும் கொரோனா உயிரிழப்புகளில் பெரும்பான்மையானோர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனவே, தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு இதுவரையிலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவசியம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொற்றா நோய்க்கு உள்ளான வயதான பலர் இருக்கின்றனர், இவர்கள் அவசியம் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவர்களுக்கு வீடுகளிலேயே தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

 

Wed, 08/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை