கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடமிருந்த காணி விடுவிப்பு

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து காணி ஒன்று நேற்று விடுவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது.

2010ம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்தத காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த காணி தொடர்ந்தும் படையினர் தம் வசம் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் காணி உரிமையாளர் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் பணிப்பி பெயரில் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் G.R.R.P ஜெயவர்த்தனவினால் குறித்த காணி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்தார்.

நிகழ்வில் 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் G.R.R.P ஜெயவர்த்தன, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர், காணி உரிமையாளர் என பலரும் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

 
Fri, 08/13/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை