ரிஷாத் எம்.பியை விடுவிக்க கோரி ஒரு இலட்சம் கையெழுத்து வேட்டை

கிண்ணியாவில் நேற்று ஜூம்மா தொழுகையின் பின் நடந்தது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி கிண்ணியாவில் நேற்று (13) ஜும்ஆ தொழுகையின் பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது

இக் கையெழுத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தியினால் முன்னெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் கையெழுத்தினை மக்களிடமிருந்து பெற்று பாராளுமன்ற உப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பும் நோக்கில் நேற்று கிண்ணியாவில் கையெழுத்து பெறப்பட்டது.

 

Sat, 08/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை