ஒரே நாளில் இரண்டரை கோடி தர்மம்: மக்களை வியப்பில் ஆழ்த்திய வர்த்தகர்

இலங்கையில் வர்த்தகர் ஒருவரின் செயற்பாடு குறித்து அனைத்து மக்களாலும் அதிகம் பேசப்படுகிறது.

களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் பகிர்ந்தளித்துள்ளார். ஒரே நாளில் இரண்டரை கோடி ரூபாவை இவ்வாறு அவர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.

உனுபிட்டிய, நாகேன பகுதியில் நேற்றுமுன்தினம் மக்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே தனது சொந்த நிதியில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.

Fri, 08/27/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை