பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் நேற்று இருவர் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படை அதிரடி

இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான 139 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றுக் காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை சோதனையிட முயன்ற போது, சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.எனினும் விரைந்து செயற்பட்ட கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கைது செய்த கடற்படையினர் , அவர்களை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துடன் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் , படகையும் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

யாழ்.விசேட நிருபர்

Fri, 08/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை