"அஜித் ரோஹணவின் நிலை கவலைக்கிடம்" செய்தியில் உண்மையில்லை

"அஜித் ரோஹணவின் நிலை கவலைக்கிடம்" செய்தியில் உண்மையில்லை-Ajith Rohana In ICU Fake Social Media Photo Circulating-Police Media Unit

கொவிட்-19 தொற்றுக்குள்னான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவின் நிலை மிக மோசமாகவுள்ளதாகவும், அவர் தீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வெளியிடப்பட்டு வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவரது முகத்திற்கு ஒப்பான TikTok இலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமொன்றுடன் குறித்த செய்தி உலா வருவதாகவும் அது அவரது புகைப்படம் இல்லையெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

"அஜித் ரோஹணவின் நிலை கவலைக்கிடம்" செய்தியில் உண்மையில்லை-Ajith Rohana In ICU Fake Social Media Photo Circulating-Police Media Unit

கொவிட் தொற்றுக்குள்ளாகி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவரது உடல் நிலை தற்போது சிறந்த நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 08/26/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை