திருச்சி அகதிகள் முகாமிலுள்ள இலங்கை தமிழர்களின் குறைகளை தீர்க்க மாநகர கமிஷனர் நடவடிக்கை

திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த முகாமிற்கு கடந்த மாதம் ஜூலை 1ம் தேதி சென்ற மாநகர கமிஷனர் அருண், அங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்களிடம் கலந்துரையாடினார். மேலும், அவர்களிடம் இங்கு என்னென்ன குறைகள் உள்ளது, குறைகளை கூறுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

இதையடுத்து மருத்துவ முகாம், சொந்த ஊரில் உள்ள சொத்துக்களை கோருவது, குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், தொழில் பயிற்சி, முகாமில் உள்ள சுற்றுச்சுவர் சேதமாகி பல ஆண்டுகள் ஆகியும் அதனை சரிசெய்யாததால் அந்நியர்கள் உள்ளே புகுந்து வருவதால் பாதுகாப்பு அச்சம் உள்ளதாக தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து ஜூலை 19ம் தேதி கொட்டப்பட்டு அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாமில் உள்ள சிறைவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஜூலை 22ம் தேதி அகதிகள் முகாமில், பொலிஸ் கிளப் துவங்கி வைக்கப்பட்டது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

 
Mon, 08/09/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை