நாட்டில் பால்மாவுக்கு எவ்வித தட்டுப்பாடுமில்லை

எரிபொருட்களும் தாராள கையிருப்பில்

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு அரசாங்கத்திடமுள்ளது. எனவே இது தொடர்பில் அநாவசிய சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மேலும் நாட்டில் பால்மா பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பால்மா தொடர்பில் பற்றாக்குறை ஏற்படும் என்று நாம் கருதவில்லை. எதிர்வரும் காலங்களில் இலங்கையில் உள்நாட்டு பால்மா உற்பத்தியை அதிகரித்து விநியோகிப்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டில் இறக்குமதிக்காக மாதாந்தம் 50 மில்லியன் டொலர் நிதி செலவிடப்படுகிறது. எரிபொருள் இறக்குமதிக்காகவும் 200 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. நாட்டில் அந்நிய செலாவணி தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை அனைவரும் அறிந்த காரணியாகும். இருந்த போதிலும் கடந்த மாதம் செலுத்தப்பட வேண்டியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஒழுங்கு முறைக்கமைய அந்நிய செலாவணி இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கான வேலைத்திட்டங்களிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்கமைய நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கான போதிய அந்நிய செலாவணி இருப்பு அரசாங்கத்திடம் காணப்படுகிறது. எனவே இது தொடர்பில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என்றார்.

Wed, 08/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை