பூஸ்டர் தடுப்பூசியின் அவசியம் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

தேவையெனில் விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தல்

நாட்டு மக்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பான கலந்துரையாடல் கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இடம்பெற்றதாகவும் இராணுவத் தளபதி நேற்று (08) குறிப்பிட்டுள்ளார். ஒரு சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துகின்றன. எங்கள் நாட்டுக்கும் இது வேண்டும் என்றால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.இதற்கு தேவையான அளவைப் பெற உடனடியாக கோரிக்கை விடுங்கள். பூஸ்டர் தடுப்பூசி கொடுக்க விரும்பினால் விரைவில் விண்ணப்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, நாட்டில் 93 சதவீத மக்களுக்கு முதல் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை