இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!-No Tsunami Threat to Sri Lanka-Meteorology

- கரையோரம் பாதுகாப்பாக உள்ளது

இந்து சமுத்திரத்தில் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு சுனாமி பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் இதனை அறிவித்துள்ளது.

இந்து சமுத்திரத்தின், சுமத்ரா தீவுக்கு அருகில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து சுமார் 1,300 கி.மீ. தொலைவில் இந்து சமுத்திரத்தில் இந்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9.12 இற்கு பதிவான குறித்த நில அதிர்வைத் தொடர்ந்து கரையோத்திலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் இந்நில அதிர்வு காரணமாக எவ்வித பாதிப்பும் இல்லை என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

Tue, 08/03/2021 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை