ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பது நியாயமற்றது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு

 

சுகாதார பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தாது ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பது நியாயமற்றதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியல் கட்டளை 27/2  இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் தோல்வி கண்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும்.

அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாட்டு பிரச்சனை இருக்கின்றது என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? அதனை தீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை தயாரிக்கின்றதா? இது எப்போது தீர்க்கப்படும்?

கடந்த டிசம்பர் மாதத்தில் கல்வி அமைச்சர் உரையாற்றும் போது, இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்னர் தற்காலிக மானியமாக இடைக்காலகொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்ததாகவும், இது தொடர்பில் கல்வி செயலாளர் திறைசேறி செயலாளருடன் கலந்துரையாடி அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இப்போது கல்வி அமைச்சர் அதற்கு பணம் இல்லை என்று கூறுகின்றார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா? இல்லையா? என்று கேட்கின்றேன். போதுமான சுகாதார பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாமலும், போதுமான அளவு தடுப்பூசியை வழங்காமலும் சேவைக்கு வருமாறு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பது எந்தளவுக்கு நியாயமானது? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 08/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை