தலிபான் பிரதிநிதிகள் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு

அப்துல் கனி பரதர் தலைமையிலான தலிபான் குழுவினர்  சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்தித்து தற்போதைய ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.  இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை மற்றும் அமைதி செயல்முறை குறித்து விவாதிக்கப்பட்டதாக தலிபான்  பேச்சாளர் முகமது நயீம் கூறினார்.

ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை எந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் எதிராக பயன்படுத்த முடியாது என்று தலிபான்கள்  சீனாவுக்கு உறுதியளித்துள்ளனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் சீனா  தலையிட மாட்டாது, ஆனால் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அமைதியைக் கட்டியெழுப்பவும் உதவ முடியும் என்று கூறி ஆப்கானிஸ்தான் மக்களுடனான ஒத்துழைப்பைத் தொடரவும் விரிவுபடுத்தவும் சீனா உறுதியளித்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் வன்முறைகள் அதிகரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறி வருகின்றன.

தலிபான் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிகாமான பிரதேசங்களை தாலிபான்கள்   கைப்பற்றி வருகின்றனர்.

மேலும்,   கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் பழமையான விதிகளை விதிக்கிறார்கள் மற்றும் ஒரு சுன்னி அமைப்பாக இருப்பதால், ஷியாக்கள் அவர்களுக்கு எதிரான மதவெறி தாக்குதல்கள் தொடர்பில் அஞ்சுகிறார்கள்.

பீஜிங் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறது மற்றும்  அங்கு  ஒரு பெரிய பங்கை வகிக்க முயன்றது.

ஜூன் மாதம் தனது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் சகாக்களுடனான சந்திப்பில், வாங் "தலிபான்களை மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் கொண்டு வருவதாக" உறுதியளித்தார் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்தார்.

"ஆப்கானிஸ்தானுக்குள் இது தீர்க்கப்பட வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு. மேலும் ஆப்கானிஸ்தானின் நிலைமை சீனாவின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடாது"   என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Sat, 07/31/2021 - 17:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை