மரணமடைந்தவர்களில் 91 சதவீதமானோர் தடுப்பூசி பெறாதோர்

இலங்கையில் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 91.7 சதவீதமானவர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட பெறாத நபர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர்களின் எண்ணிக்கை 5,295 ஆகும். அதேநேரம் கொரானா தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸையாவது பெற்ற நபர்களில் 417 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த உயிரிழப்புகளில் 7.2 சதவீதமாகும்.

கொரேனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்களில் 63 பேர் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். ந்த அறிக்கை இலங்கையில் 2021 ஆகஸ்ட் 13 வரை பதிவான மொத்த 5,775 கொவிட் தொடர்பான இறப்புகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

 

Sat, 08/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை