60 வயதானோருக்கு தடுப்பூசி வழங்கல்

1906 இல் பதிவு செய்யலாம்

மேல் மாகாணத்தில் 60 வயதைத் தாண்டிய, இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் விசேட வேலைத்திட்டம் நேற்று (11) ஆரம்பமானது. தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களின் விபரங்களை கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் திரட்டியுள்ளது. இதற்கமைய தடுப்பூசி ஏற்றப்படும் தினம், இடம், ஊசியை ஏற்றிக்கொள்வதற்காக செல்ல வேண்டிய நேரம் என்பன பற்றிய தகவல்கள் குறுஞ் செய்தியாக உரியவர்களுக்கு அனுப்பப்படவுள்ளது.

மேலும் கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையிலும் கம்பஹா வைத்தியசாலையில் இன்று தொடக்கம் எதிர்வரும் தினங்கள் வரை கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

60 வயதைத் தாண்டியும் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளதவர்கள் 1906 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் தடுப்பூசியைப் பெற்று கொள்வதற்கான தகவல்கள் வழங்கப்படவுள்ளன.

 

 

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை