6 வகை தடுப்பூசி டோஸ்கள் பெற்றவர்களுக்கு அமீரக சுற்றுலா வீசா

6 வகை தடுப்பூசி டோஸ்கள் பெற்றவர்களுக்கு அமீரக சுற்றுலா வீசா-UAE Tourist Visa for Complete Vaccinated People-From All Countries

- அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நாளை (30) முதல் அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இதுவரை AstraZeneca/Covishield, Moderna, Pfizer, Johnson & Johnson, Sinopharm, Sinovac ஆகிய கொவிட் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தமது நாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்ட நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு சுற்றுலா வீசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அமீரக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் வைத்து கட்டாய Rapid Antigen சோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sun, 08/29/2021 - 17:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை