தபாலகங்கள் சனி உள்ளிட்ட வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் இயங்கும்

தபாலகங்கள் சனி உள்ளிட்ட வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் இயங்கும்-Post Office Open on 4 Days in a Week

தற்போது நிலவும் கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் நாட்டிலுள்ள தபாலகங்கள், உப தபாலகங்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு மாத்திரம் திறக்கப்படுமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பதில் தபால் மாஅதிபர் எச். ஹேவகே இனால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் மாத்திரம் நாட்டிலுள்ள தபாலகங்கள், உப தபாலகங்கள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலுள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தினால் முன்னெடுக்கப்படும் பொதிகள் விநியோக சேவைகள் உள்ளிட்ட சேவைகள் வழமை போன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Mon, 08/09/2021 - 21:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை