ஆதிவாசி தலைவர் ஊருவரிகே உட்பட 44 பேருக்கு கொவிட்

தம்பான ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னில அத்தோ, அவரது மனைவி உட்பட 44 ஆதிவாசிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதிவாசிகள் 114 பேரிடம் நடத்தப்பட்ட எழுமாறான பீ.சீ.ஆர். பரிசோதனையின் போது இந்த 44 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தோ, அவரது மனைவி ஆகிய இருவரும் மஹியங்கனை ஆஸ்பத்திரியின் கொரோனா தொற்றுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Tue, 08/31/2021 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை