சீன இராணுவத்தினால் இலங்கைக்கு 3 இலட்சம் தடுப்பூசி டோஸ்கள் அன்பளிப்பு

சீன இராணுவத்தினால் இலங்கைக்கு 3 இலட்சம் தடுப்பூசி டோஸ்கள் அன்பளிப்பு-300,000 Doses of Sinopharm Vaccines Gifted by the Chinese People's Liberation Army-PLA

சீன மக்கள் விடுதலை இராணுவம், 300,000 Sinopharm தடுப்பூசி டோஸ்களை இலங்கையின் பாதுகாப்பு பிரிவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இவை, எதிர்வரும் சனிக்கிழமை (28) இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

இம்மாத இறுதிக்குள், இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சீனத் தூதரகம் ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன மக்கள் குடியரசின் தரைப்படை, கடற்படை, வான்படை மற்றும் ஏவுகணை மையங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இராணுவமே சீன மக்கள் இராணுவமாகும்.

சீனாவின் முதலாவது உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற வேளையில் (1927-1937) ஓகஸ்ட் 01,1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டது. இந்த நாள் மக்கள் விடுதலை இராணுவ தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.

இன்று உலகத்தின் மிகப் பெரிய இராணுவமாக வளர்ந்துள்ள சீன மக்கள் விடுதலை இராணுவம், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவமென அழைக்கப்படுகின்றது.

Wed, 08/25/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை