ஒரு வருட காலப்பகுதிக்குள் 3 இலட்சம் பேருக்கு தொற்று

ஆரம்பம் முதல் இதுவரை 3,11,349 தொற்றாளர் பதிவு

ஒரு வருடக் காலப்பகுதியான 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நாட்டில் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் திவுலபிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொத்தணி என நான்கு பிரதான கொத்தணிகளில் இந்த எண்ணிக்கையான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வரையில் இந்த பிரதான கொத்தணிகள் ஊடாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 302,817ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 2,510 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 311,349ஆக அதிகரித்துள்ளது.

 

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை