கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 33 ஆயிரம் கட்டில்களில் 30 ஆயிரம் நிரம்பியுள்ளன

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ்நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 33 ஆயிரம் கட்டில்களில் 30 ஆயிரம் கட்டில்கள் நிரம்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான பல்வேறு வைத்தியசாலைகளிலும் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களிலும் தற்போது நூற்றுக்கு 90 வீதமான கட்டில்கள் நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வைத்தியசாலைகளிலும் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களிலும் பெருமளவு கொரோனா நோயாளிகள்அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில்எண்பது வீதமான கட்டில்களும் சிகிச்சை நிலையங்களில் 90 வீதமான கட்டில்களும் தற்போது உபயோகத்திலுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய நிலைமையின்படி ஆஸ்பத்திரிகளில் அனைத்துக் கட்டில்களும் உபயோகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையங்களிலும 10 வீதமான கட்டில்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Thu, 08/05/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை