உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 311 பேர் தடுப்புக்காவலில்!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 311 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சி.வி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் 365 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா  அதிபர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விசேட உரையொன்றை நேற்று நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களானது சஹ்ரான் உள்ளிட்ட குழுவின் மூலம் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் கிடையாது. இந்த தாக்குதல்களுக்கு முன்பே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றைக் கருத்திற் கொள்வது முக்கியமாகும். அதற்கிணங்க மேற்படி தாக்குதல்களானது நீண்டகால திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடாகும். அதனால் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வெளியிடுவது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடையாக அமையலாம். உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் எந்தவித புரிந்துணர்வும் இல்லாமை காரணமாக அந்த விசாரணைகள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன என்பதையும் பொலிஸ்மா அதிபர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 08/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை