ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் திருச்சி - இலங்கைக்கு செப். 2 முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

ஓராண்டு இடைவெளிக்குப் பின்னா் திருச்சி - இலங்கைக்கிடையிலான விமானப் போக்குவரத்து எதிர்வரும் செப். 02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா காரணமாக திருச்சியிலிருந்து சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சியுடனான விமானப் போக்குவரத்தை செப். 02 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

தற்போது திருச்சியிலிருந்து இலங்கை செல்வோர் மிகுந்த சிரமங்களுடன் சென்னை வழியாகவே பயணிக்கின்றனர். அதேபோல அரபு நாடுகளிலிருந்து வருவோரும் இலங்கை வழியாக திருச்சி வந்து செல்ல முடிவதில்லை. இதனால் இலங்கைக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் இந்த விமானம் காலை 09 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு, 10 மணிக்கு திருச்சியை அடையும். பின்னா் அங்கிருந்து முற்பகல் 11 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு இலங்கையை வந்தடையும். பின்னா் படிப்படியாக பிற நாட்களிலும் விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Mon, 08/30/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை