பெருந்தோட்ட மக்களுக்கும் ரூபா. 2,000 கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த முறை வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை