தகுதியிருந்தும் ரூ. 2000 கிடைக்கவில்லையா?

பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண பணமான 2000 ரூபாய் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டின் அநேகமான பகுதிகளில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது. இதுவரை கொடுப்பனவு கிடைக்காத அல்லது கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் தங்களின் முறையீட்டை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

Fri, 08/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை