பொதுப் பணித்துறையில் 2000 கட்புலனற்றோர்; சுற்றுநிருபத்தில் உள்ளடக்கவில்லை

கவலை கொள்ளும் அச்சமூகம்

இந்த நாட்டில் பொதுப் பணித்துறையில் சுமார் 2000 கட்புலனற்றோர் உள்ளனர்.கொரோனா அதிகரிக்கும் அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள எந்தவொரு சுற்றறிக்கையும் கட்புலனற்றோர் சமூகத்தை உள்ளடக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக அச் சமூகம் கவலையடைந்திருப்பதாக இலங்கையின் கற்புலனற்றோர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மாற்றுத் திறனாளிகளின் ஐக்கிய முன்னணியின் உதவி செயலாளருமான பிரசன்ன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே, பொது நிர்வாக சுற்றறிக்கைகளை வெளியிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் எனவும் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கண்டியில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கட்புலனற்றோர் தேசிய கூட்டமைப்பின் செயலர் .

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர துறையின் அறிக்கையின்படி கொவிட் தொற்று நோயால் பொருளாதார , சமூக மற்றும் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.நாட்டில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பொதுச் சேவையில் இருப்பவர்களை உள்ளடக்கி பல்வேறு சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

பொதுத்துறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ள பலர் உள்ளனர். அவர்கள் ஒரு பாரிய பங்கை வகிக்கிறார்கள். அவர்கள் பணிக்கு செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். கற்புலனற்றோர் தொட்டுணரக்கூடிய தகவல் தொடர்பு அடிப்படையில் வேறு வகையிலான சமூக தொடர்புகளில் ஈடுபடுகின்றனர். பொதுப் போக்குவரத்தில் அவர்கள் பாரிய இடையூறுகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதில் பல்வேறு பாரிய பிரச்சினைகள் உள்ளன.

ஆகவே, எதிர்காலத்தில் சுற்றறிக்கைகளை வெளியிடுபவர்கள் இதனை புரிந்துகொண்டு, கட்புலனற்றோர் சமூகத்தை உள்ளடக்கும் சுற்றுநிருபங்கள் வெளியிட வேண்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா

 

 

Mon, 08/09/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை