உலகில் கொரோனா சம்பவம் 200 மில்லியனைத் தாண்டியது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டியுள்ளது.

உலகளவில் 2.6 வீதத்தினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில், மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நோய்த் தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து உலகளவில் 100 மில்லியன் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாக, ஓராண்டுக்கும் மேல் எடுத்தது. இருப்பினும், 6 மாதங்களிலேயே மேலும் ஒரு மில்லியன் சம்பவங்கள் பதிவாயின.

இந்த நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.

240 நாடுகளில் குறைந்தது 83 நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரிப்பதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன. இதில், அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகளில் ஆக அதிகமான சராசரி வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் கடந்த வாரங்களில் பதிவாகியுள்ளன. அந்த நாடுகளில் பதிவாகும் சம்பவங்கள், அன்றாடம் பதிவாகும் சம்பவங்களில் 38 வீதம் என்று ரோய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

இதில் உலகெங்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் ஏழு பேரில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவராக உள்ளார். மிகக் குறைவான தடுப்பு மருந்து வழங்கப்பட்ட புளோரிடா மற்றும் லூசியான போன்ற பிராந்தியங்களில் அதிக அளவான கொவிட்-19 நோயாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் 70 வீதமான வயதானவர்கள் குறைந்தது ஒரு தடைவையேனும் தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

Fri, 08/06/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை