20 வருடங்களுக்கு முன் போன்று தலிபான்கள் இப்போதில்லை

சீன வெளிவிவகார அமைச்சு

20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்ததை விடவும் இப்போது தலிபான்கள் மிகவும் தெளிவாகவும் விவேகமாகவும் உள்ளார்கள் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சஹுவா சுன்யிங் செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

சிலர் தலிபான்கள் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் எப்போதும் மாறாதிருக்கக்கூடியது என்று எதுவுமில்லை என்பதை நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் கூறுவதை செவியேற்பதோடு செயல்களையும் நோக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெய்லி’, தலிபான்களின் சுருக்க வரலாற்று வீடியோ கிளிப்பொன்றை அண்மையில் வெளியிட்டது. அதில் அவர்களது பயங்கரவாத தொடர்புகளைக் குறிப்பிடவில்லை. ஆப்கானிஸ்தான் பெண்கள் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் பெற்றிருந்த வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

‘ஆப்கானிஸ்தான் மக்கள் பயப்படுகிறார்கள். சில பெண்கள் வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள்’ என்று சீனாவின் உலகளாவிய தொலைக்காட்சி வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க படையினரின் வெளியேற்றத்தை தொடர்ந்து தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை சீனா வரவேற்பது ஒரு மூலோபாயத் திருப்பமாகும்.

ஆப்கானிஸ்தானில் உறுதியற்ற தன்மை நீடிப்பது அதன் அண்டை நாடான பாகிஸ்தானை பாதிக்கும். அங்கு சீனா 50 பில்லியன் டொலர்களை வீதி உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/27/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை