வயோதிபர் இல்லத்தில் கொரோனா தொற்று; 20 வயோதிபர்கள், 6 ஊழியர்களும் பாதிப்பு

பிலியந்தலை வயோதிபர் இல்லமொன்றில் வயோதிபர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேச சுகாதாரப் பரிசோதகர் டாக்டர் அருண ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

அவ் வயோதிபர் இல்லத்தில் தங்கியுள்ள 20 வயோதிபர்களுக்கும் அங்கு பணிபுரியும் 6 ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் அதிகரித்துக் காணப்படுவதால் வயோதிபர் இல்லத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

டாக்டர் அருண ஜயதிலக்க, பிலியந்தலை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் இந்திக்க எல்லாவல, மருத்துவ அதிகாரி டாக்டர் நந்தனி சோமரத்னஉள்ளிட்ட குழுவினர் வயயோதிபர் இல்லத்துக்கு நேரடியாக சென்று அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் டொக்டர் அருண ஜயதிலக்க மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Thu, 08/05/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை