நேற்று 174,985 பேருக்கு AstraZeneca இரண்டாம் டோஸ் தடுப்பூசி

நேற்று 174,985 பேருக்கு AstraZeneca இரண்டாம் டோஸ் தடுப்பூசி-COVID Vaccination-Immunization Progress-Aug 02

- இதுவரை ஒரு கோடி 3 இலட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- இரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்: சுமார் 25 இலட்சம்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, மேல் மாகாணத்தில் நேற்று (02) 174,985 பேருக்கு AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த இரண்டு நாட்களிலும் வழங்கப்பட்ட AstraZeneca தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 244,251 என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றையதினம் (02) கேகாலை மாவட்டத்திலும் முதல் டோஸாக 22,981 பேருக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில் நேற்றையதினம் மாத்திரம் 422472 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

நேற்றையதினம் (28),

- AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸ், 22,981பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 174,985 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ், 203,515 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 18,483 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Pfizer தடுப்பூசி முதலாம் டோஸாக 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 06 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Moderna தடுப்பூசி முதலாம் டோஸாக 2,490 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை
Covishield:
- 1ஆவது டோஸ் - 948,223 பேருக்கு
- 2ஆவது டோஸ் - 630,136 பேருக்கு

Sinopharm:
- 1ஆவது டோஸ் - 8,284,463 பேருக்கு
- 2ஆவது டோஸ் - 1,803,524 பேருக்கு

Sputnik-V:
- 1ஆவது டோஸ் - 159,081 பேருக்கு
- 2ஆவது டோஸ் - 14,503 பேருக்கு

Pfizer:
- 1ஆவது டோஸ் - 201,507 பேருக்கு
- 2ஆவது டோஸ் - 198 பேருக்கு

Moderna:
- 1ஆவது டோஸ் - 716,581பேருக்கு

அந்த வகையில் இதுவரை ஒரு கோடியே 3 இலட்சத்து 9 ஆயிரத்து 855 பேருக்கு (10,309,855) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

24 இலட்சத்து 48 ஆயிரத்து 361 பேருக்கு (2,448,361) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

Tue, 08/03/2021 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை