நைகர் கிராமத்தின் மீது தாக்குதல்: 16 பேர் பலி

பொதுமக்கள் மீது இந்த ஆண்டு இடம்பெற்று வரும் படுகொலைகளின் தொடர்ச்சியாக வடமேற்கு நைகர் கிராமம் ஒன்றில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டெலிபரி பிராந்தியத்தின் தெயிம் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது அடையாளம் காணப்படாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டதாக, மேயர் ஹலிதோ சிபோ ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதே பிராந்தியத்தின் மற்றொரு கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மாலி நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் டில்லபரி மற்றும் டஹுவா பிராந்தியங்களில் ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் இந்த ஆண்டில் 420க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி இருப்பதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைக் கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. நைகரில் தாக்குதல்கள் அதிகரித்ததை அடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதோடு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 08/23/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை