மேலும் 15,000 Sputnik-V தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

மேலும் 15,000 Sputnik-V தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன-15000 more doses of Sputnik-V Vaccine Arrived

மேலும் 15 ஆயிரம் Sputnik-V தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

ரஷ்ய தயாரிப்பான இத்தடுப்பூசிகள் இன்று (11) அதிகாலை இலங்கையை வந்தடைந்ததாக, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் (SPC) பொது முகாமையாளர், தினூஷ தஸநாயக்க தெரிவித்தார்.

இவை நள்ளிரவு கடந்து 12.30 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த Sputnik-V தடுப்பூசி டோஸ்கள், ஏற்கனவே முதல் டோஸாக அதனைப் பெற்றவர்களுக்கு இரண்டாம் டோஸாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தினூஷ தஸநாயக்க தெரிவித்தார்.

Wed, 08/11/2021 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை