முல்லைத்தீவில் 142 Kg கேரள கஞ்சா மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை கிராம சேவகர் பிரிவில் புதுமாத்தளன் பகுதியில் 142 கிலோ கேரள கஞ்சா (26) மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (26) மாலை நான்கு உரப்பைகளில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த  கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ புலனாய்வாளர்களின் தகவலடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் பொதிகளை மீட்டுள்ளனர். இதில் நான்கு உரப்பைகளில் இருந்து 72 பொதிகள் இருந்துள்ளதோடு அவற்றின் மொத்த நிறை 142 கிலோகிராம் என தெரியவருகிறது.

அளவீட்டு பணிகளை தொடர்ந்து மேலதிக நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை