1,04,000 "பைசர்" தடுப்பூசி நேற்று நாட்டை வந்தடைவு

கட்டார் விமானத்தில் கட்டுநாயக்கவுக்கு வந்தது

 

பைசர் தடுப்பூசியின் மற்றொரு தொகை நேற்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

104,000 பைசர் தடுப்பூசிகள் 18 பெட்டிகளில் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக இந்த தடுப்பூசிகள் நேற்று அதிகாலை 02.15 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தன. இலங்கைக்கு ஐந்தாவது கட்டமாக பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை