இந்தியாவிலிருந்து வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசன் இறக்குமதி

இந்தியாவிலிருந்து வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசன் இறக்குமதி-Sri Lanka Will Import 100 Metic Tonnes of Oxygen Per Week

கொவிட் தொற்றாளர்களின் சிகிச்சைக்காக, இந்தியாவிலிருந்து வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதற்கான கொள்வனவு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒட்சிசனின் அளவை தேவைக்கேற்ப அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்றையதினம் (14) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

(ஒரு மெட்ரிக் தொன் = 1,000 கி.கி.)

Sat, 08/14/2021 - 13:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை