நியூ சௌத் வேல்ஸில் தினசரி தொற்று 1,000 ஐத் தாண்டியது

அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை கண்டிராத அளவு நோய்ப்பரவல் உச்சத்தைத் தொட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூவர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு நடப்பில் உள்ள முடக்கநிலை அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் டப்போ வட்டாரத்தில் அதிகரித்துவரும் நோய்ப்பரவல் குறித்து மாநில முதலமைச்சர் கிளேடில் பெரிஜிக்லியன் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் 13ஆம் திகதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக்கூடும்.

கடந்த புதன்கிழமை நிலவரப்படி, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் 6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த இலக்கை எட்டினால், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குச் சலுகைகள் வழங்கப்படும் என்று பெரிஜிக்லியன் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார். 

 

Fri, 08/27/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை